Sunday 8 July 2012

பேத்தியின் புத்திசாலித்தனம்

ஒரு குடும்பத்தினர் ,சென்னை காந்திமண்டபத்தைப் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தாற்போல உள்ள தியாகிகள் மணிமண்டபமருகே உள்ள வ.உ.சிதம்பரனார் கோவைச் சிறையில் இழுத்த கல் செக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அக்குடும்பத்தில் உள்ள பெரியவர் குழந்தைகளிடம்,இதுதான் நம்து நாடு விடுதலை பெற வ.உ.சி. இழுத்தச் செக்கு.இதனால்தான் அவரை நாம் செக்கிழுத்தச் செம்மல் என்கிறோம் என்றார்.அவர் செக்கிழுத்துப் பெற்றுத் தந்த சுதந்திரம் இன்று நம்மை வாழ வைக்கிறது என்றார்.
     அப்போது அவரது பேத்தி ஒருத்தி ,தாத்தா நம்ம நாட்டிலே லஞ்சம் வாங்கும் அனைவரையும் இந்த செக்கிலேக் கட்டி நூற்றிஓரு தடவை இழுக்கச்செய்து அதுக்கப்புறம் ஜெயிலிலேப் போடணும்’அதுதான் வ்.உ.சி தாத்தாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்’ தாத்தா என்றாள்.
  அனைவரும் திகைத்து நின்றனர்.

0 comments:

Post a Comment